அக்டோபர் 14, 2007...12:11

சைக்கோ கைனெஸிஸ்

மறுமொழிகளுக்குச் செல்க

தலைப்பை பார்த்துட்டு ஏதோ மனவியாதி பத்தி சொல்லப்போறேன்னு நினைச்சுக்காதீங்க! அதெல்லாம் ஒன்னுமில்லை. அதாவது, ஒரு பொருளை, அதைத் தொடாமலேயே, எந்த வெளிப்புற கருவியின் உதவியும் இல்லாமலேயே, வெறும் மன சக்தியை மட்டும் பயன்படுத்தி அசைச்சு நகர்த்தலாமாமே! இந்த விஷயத்துக்கு தான் சைக்கோகைனெஸிஸ் (psychokinesis) அப்படின்னு ரொம்ப விஞ்ஞானப்பூர்வமா பெயரெல்லாம் வைச்சு வித்தை காட்றாங்க. இந்த வீடியோவைப் போய் பாருங்க, நான் என்ன சொல்றேன்னு புரியும். இதெல்லாம் நடக்கிற காரியமா? இதையெல்லாம் போய் நம்பறதா? என்னவோ போங்க… என்னைப் பொறுத்த வரைக்கும், என் கண் முன்னாடியே யாராவது இதை செய்து காட்டினால் தான் இதை உண்மைன்னு முழுமையா என்னால நம்ப முடியும். ஆனா, இதெல்லாம் சுத்தப் பொய், கண்கட்டி வித்தைன்னு சொல்லி அப்படியே ஒதுக்கிட முடியல…. ஒரு இருநூறு வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஜனங்க கிட்ட போய், தீப்பெட்டி சைஸ் கருவி ஒன்னை பயன்படுத்தி உலகத்துல இருக்கிற யாரோடையும் பேச முடியும்னு யாராவது சொல்லியிருந்தாங்கன்னா அவங்களை பைத்தியம்னு சொல்லி அடிச்சு விரட்டியிருப்பாங்க… யார் கண்டது, எதிர்காலத்துல என்னென்னவெல்லாம் சாத்தியமாகுமோ.

இந்த psyckokinesis எல்லாம் நீங்களும் கத்துகிட்டு மனம் மூலமாவே பொருட்களை நகர்த்தலாம்னு சொல்லி பெரிய பெரிய விளக்கமெல்லாம் இங்கே கொடுத்திருக்காங்க. இந்த வித்தையெல்லாம் பொறுமையா கத்துக்கிட்டு செய்ஞ்சு பார்க்கிறதுக்கு எனக்கு நேரமுமில்லை, பெரிய ஆர்வமுமில்லை. யாராவது முயற்சி பண்ணி பார்த்து இந்த மாதிரி மாயாஜாலமெல்லாம் செய்ய முடிஞ்சுதுன்னா எனக்கு சொல்லி அனுப்புங்க. ஆனா be careful, நான் சொல்றதை கேட்டுட்டு இந்த psychokinesisல ரொம்ப அதிகப்படியா மூழ்கிப்போய் சைக்கோத்தனமா மாறிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை, சொல்லிட்டேன் ஆமா :mrgreen:

Psychokinesis at Wikipedia

2 மறுமொழிகள்

  • neengal solvathu pola oru sila namba mudiyatha vishayangal ulagil nadantha vannam than irukirathu.
    ungalukku neram irunthal “bermuda triangle” patri ungal blog-il pathiyalame…?!

  • ஆமாம். மனித மனதின் புரிதல்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் நிறையவே இருக்கு. கண்ணை மூடிட்டு எதையும் நம்ப வேண்டியதில்ல, ஆனா தான் காண்பது மட்டுமே உண்மைன்னு பல மனிதர்கள் நினைக்கறது மூடத்தனம்.

    Bermuda triangle தானே, அது போல் பல விஷயங்கள் இருக்கு. கண்டிப்பா இந்த மாதிரி விஷயங்கள் பற்றி எழுதும் எண்ணம் உண்டு. அதுக்கு தானே இந்த பதிவேடு :)


மறுமொழி இடுக