srini's tamil blog

அன்னை தெரசா பொன்மொழிகள்
நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.

நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.

அமைதியின் பலன் பிரார்த்தனை

பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை

நம்பிக்கையின் பலன் அன்பு

அன்பின் பலன் சேவை

சேவையின் பலன் அமைதி.

இன்று (26 ஆகஸ்ட்) அன்னை தெரசாவின் பிறந்த நாள்.

உபுண்டு 8.04 தமிழ் எழுத்துரு பிரச்சினைக்கு தீர்வு
உபுண்டு 8.04 ஹார்டி ஹெரான் தமிழ் எழுத்துரு பிரச்சினையை சரி செய்ய எளிமையான வழி:

Terminalஐ திறந்து (Applications -> Accessories -> Terminal) கீழ்வரும் கட்டளையை கொடுக்கவும்.

sudo apt-get remove ttf-indic-fonts-core

Screenshots

Before removing ttf-indic-fonts-core

இப்படி இருந்த தமிழ் எழுத்துரு…

After removing ttf-indic-fonts-core

ttf-indic-fonts-coreஐ விலக்கிய பிறகு இப்படி ஆகிவிட்டது!

உபுண்டு பற்றி மேலும் அறிய

விக்கிபீடியாவில் உபுண்டு லினக்ஸ்

Ubuntu at Wikipedia

‘நட்பு’ பற்றி திருவள்ளுவர்
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு. (திருக்குறள் 782)

வளர்பிறை சந்திரன் போல வளர்வது பண்பு நிறைந்தவருடன் கொள்ளும் நட்பு. தேய்பிறை சந்திரன் போலத் தேய்வது அறியாமையில் உழல்பவருடன் கொள்ளும் நட்பு.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென் றிடித்தற் பொருட்டு. (திருக்குறள் 784)

நட்பு என்பது நகுதலுக்காக (சிரித்தல், பொழுது போக்குதல் (enjoyment)) அல்ல. நண்பர் தவறு செய்ய முற்படும் போது அதை கண்டிப்புடன் சுட்டிக்காட்டுதலே நட்பாகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா

னட்பாங் கிழமை தரும். (திருக்குறள் 785)

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு. (திருக்குறள் 786)

முகத்தைப் பார்த்து சிரித்துக் கொண்டால் மட்டுமே அது நட்பாகிவிடாது. நெஞ்சத்தால், உள்ளத்தால் ஒன்றுபடுதலே உண்மையான நட்பு.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு. (திருக்குறள் 788 )

உடல் மேல் உடுத்தியிருக்கும் ஆடை நழுவும் போது உடனே கையானது விரைந்து சென்று நழுவும் ஆடையை சரி செய்யும். அது போல் நண்பர் துன்பப்படும் போது விரைந்து சென்று அவர் துன்பத்தைக் களைவதே உண்மையான நட்பு.

நட்பு பற்றிய பொன்மொழி ஒன்று:

நீ தன்னம்பிக்கை இழக்கும் போதும் உன் மீது நம்பிக்கை வைப்பவனே உண்மையான நண்பன்.

ஹெலன் கெல்லர் பொன்மொழிகள்
சிறு வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தார் ஹெலன் கெல்லர். இதனால் துவண்டுவிடவில்லை அவர். ‘நம்பிக்கை’ எனும் ஒரேயொரு ஆயுதத்தை மட்டும் கொண்டு தடைக்கற்களை வழிக்கற்களாக்கி பின்னாட்களில் சிறந்த எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் உருவெடுத்தார்.

ஹெலன் கெல்லரின் பிறந்த நாளான இன்று அவர் உதிர்த்த சில பொன்மொழிகளின் தமிழாக்கம்.

பறக்க விரும்புபவனால் படர முடியாது.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

ஹெலன் கெல்லர் பற்றி மேலும் அறிய…

Helen Keller – Wikiquote

ஆபரேஷன் தியேட்டர்!
நகரத்திலேயே பெரிய மருத்துவமனை. ஆபரேஷன் தியேட்டர். உள்ளேயிருந்து குரல் கேட்கிறது, “ஏன் பயப்படறீங்க, சின்ன ஆபரேஷன் தான், ஒரு தப்பும் நடந்துடாது, கொஞ்ச நேரத்துல முடிஞ்சுடும்… ஏன் உங்க கை வெட வெடன்னு நடுங்குது?”. உடனே கதவைத் திறந்துகொண்டு பேஷன்ட் அறக்க பறக்க ஒடி வருகிறார். வெளியிலிருந்தவர் கேட்கிறார், “அதான் நர்ஸ் சொல்றாங்க இல்ல, சின்ன ஆபரேஷன் தான், ஏன் இப்படி பயந்து ஒடி வரீங்க?”. பேஷன்ட், “எல்லாம் சரிதான், ஆனா நர்ஸ் சொன்னது என்கிட்ட இல்ல, ஆபரேஷன் பண்ணப்போற டாக்டர் கிட்ட.”

தசாவதாரம்
ஒரே திரைப்படத்தில் பத்து வேடங்களில் நடித்து சாதிக்க வேண்டும் என்று கமல் நினைத்திருக்கிறார், சாதித்திருக்கிறார். சும்மா சொல்லக்கூடாது, ஒவ்வொரு வேடங்களுக்கும் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார்.

12ஆம் நூற்றாண்டு நம்பி வேடத்தில் விஷ்ணு மீது கொண்ட நம்பிக்கையாலும் பக்தியாலும் நம்மை உருக்குகிறார். பல்ராம் நாயுடுவாக கலகலப்பூட்டுகிறார். பிராமணப் பாட்டி வேடத்தில் பாட்டியாகவே மாறி விட்டிருக்கிறார். அவ்தார் சிங்கின் முக பாவனைகளை மேக்கப் மறைத்தாலும், கண்களாலேயே உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறார்.

அமெரிக்க ஜனாதிபதி வேடத்தில் ஜார்ஜ் புஷ்ஷின் பொது அறிவையும் சமூக அக்கறையையும் நன்றாகவே வெளிப்படுத்தியுள்ளார் கமல்!

கிறிஸ் ஃபிளெட்சர் வேடத்தில் கமல் வெளிப்படுத்தும் அனாயசமான அலட்சியமான வில்லத்தனம் ஹாலிவுட் ரகம். ஜப்பானிய வேடத்திலும் ஆக்ஷனில் கலக்குகிறார். வில்லன் கிறிஸ் ஃபிளெட்சர், ஜப்பானியர், இஸ்லாமியர் ஆகிய பாத்திரங்களுக்காக கமலின் முகத்தில் மேக்கப்பை ஒரேயடியாக அப்பி விட்டிருப்பதால் இவர்களின் முகம் எப்போதும் இறுக்கமாகவே உள்ளது, செயற்கைத்தனம் நன்றாகவே தெரிகிறது. வில்லன் வேடத்தில் முகம் இறுக்கமாக இருந்தாலும் பாடி லாங்குவேஜ் அதிரடி!

எல்லா பாத்திரங்களையும் விட ‘வின்சென்ட் பூவராகன்’  தான் நம் மனதில் இடம் பிடிக்கிறார்.

மேக்கப் இல்லாமல் இயல்பாக கமல் நடித்திருக்கும் ஒரே பாத்திரம் ‘கோவிந்தன் ராமசாமி’.

படம் நெடுகவும் கமல் ராஜ்ஜியம் தான். கமலுக்கு அடுத்தபடியாக படம் முழுவதும் வருவது அசின் மட்டுமே. கொஞ்சம் அலட்டல் இருந்தாலும் கண்ணியமான பாத்திரம். நன்றாகவே செய்துள்ளார். 12ஆம் நூற்றாண்டு பாத்திரத்திலும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மல்லிகா ஷெராவத், சந்தான பாரதி, ‘அப்பாராவ்’, நெப்போலியன் போன்றவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தத்தம் பங்கை செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். நாகேஷ், கே.ஆர். விஜயா, ஜெயப்பிரதா, வையாபுரி போன்றவர்ளுக்கு ஸ்கோப் இல்லாத காரெக்டர்கள்.

விறுவிறு திரைக்கதை படத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறது. திரைக்கதையிலும் கமல் சாதித்திருக்கிறார். வசனங்களில் நகைச்சுவையுடன் ஆங்காங்கே சமூக உணர்வுகளும் பகுத்தறிவும் பளிச்சிடுகின்றன. உதாரணமாக, பயோ ஆயுதங்களின் அபாயங்கள், பணத்திற்காக மனசாட்சியை விற்கும் விஞ்ஞானிகள், மணல் கொள்ளை அநியாயங்கள், இன்றும் தொடரும் சில மூட நம்பிக்கைகள், “குரான் படிப்பவன் எல்லாம் தீவிரவாதி அல்ல”, “தெலுங்குக்காரன் நானே தமிழ் பேசும் போது தஞ்சாவூர்க்காரன் நீ இங்கிலீஷ் பேசறே” போன்றவை. ஆனால் நாத்திகமும் விஞ்ஞானமும் தான் பகுத்தறிவு என்பது போன்ற தோரனை வசனங்களில் சில இடங்களில் தெரிகிறது. நாத்திகத்திலும், ஏன் விஞ்ஞானத்திலும் கூட மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன.

வாலியின் பாடல் வரிகளில் வெளிப்படுவதோ அர்த்தமுள்ள பகுத்தறிவு. குறிப்பாக, “கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது“, “ஊனக் கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான், ஞானக்கண்ணில் பார்த்தால் யாரும் சுற்றம்தான்”, “சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது, தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது”, போன்ற வரிகள்.

படத்தின் பாடல்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆராவாரத்துடன் வெளியிடப்பட்டு பாடல்கள் தமிழ்நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தன் பானியிலிருந்து சற்றே விலகி ஒரு தமிழ்ப் படத்திற்கு நன்றாகவே இசையமைத்திருக்கிறார் ஹிமேஷ் ரேஷமய்யா. “கல்லை மட்டும் கண்டால்”, “முகுந்தா” பாடல்கள் அருமை. தேவிஸ்ரீ பிரசாதும் ரீ ரெக்கார்டிங்கில் கலக்கியிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் புகுந்து விளையாடியிருக்கிறார்.

ஷங்கர் போல் அனாவசியமாக பாடல் காட்சிகளுக்கு செலவு செய்யாமல் இப்படத்தில் கிராஃபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பங்கள் சரியான முறையில் கதைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப் பட்டு திரைப்படத்தை மெருகூட்டுகிறது. ஆனாலும் சில இடங்களில், குறிப்பாக 12நூற்றாண்டு காட்சிகளில் கிராஃபிக்ஸில் கொஞ்சமே கொஞ்சம் அமெச்சூர்தனம் தெரிவது உண்மை.

கமலின் பத்து அவதாரப் பிரதாபங்களே படத்தை ஒரேயடியாக விழுங்கிவிடாமல் ஒரு சுவரஸ்யமான பொழுதுபோக்குப் படமாக தசாவதாரம் வந்திருப்பதில் இயக்குனர் கே. எஸ் ரவிகுமாரின் பங்கு நன்றாகவே தெரிகிறது. கடைசி பாடலில் கே. எஸ். ரவிகுமார் நன்றாகவே ஆட்டம் போடுகிறார்!

கமலின் தசாவதார சாதனைகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு சில அவதாரங்களுக்கு வேறு நடிகர்களை நடிக்க விட்டிருந்தால் இன்னும் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கும், திரைப்படமும் மேலும் சிறப்பாக வந்திருக்கும். ஆனால் பத்து அவதார சாதனை என்பது சும்மாவா என்ன. கமலின் பத்து அவதாரங்களுடன் கதை, திரைக்கதையையும் மிகவும் மெனக்கட்டு பாலன்ஸ் செய்து ஒரு சிறந்த திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

யார் யார் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்:

கமல் ரசிகர்கள்.

கடின உழைப்பை பாராட்டத் தெரிந்தவர்கள்.

மூன்று மணிநேர பொழுதுபோக்கை தேடுபவர்கள்

குறை கண்டுபிடிப்பதில் சுவை காண்பவர்கள். எல்லாப் படங்களையும் போலவே இப்படத்திலும் குறைகளுக்குக் குறையொன்றுமில்லை

யார் யார் இப்படத்தை பார்க்கக் கூடாது:

ஏற்கனவே படம் பார்த்தவர்களின் சிலாகிப்புகள், விமர்சனங்கள் இவையெல்லாம் கேட்டுவிட்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் படத்துக்கு செல்பவர்கள். மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்த்தால் இந்தப் படம் மட்டுமல்ல, எந்தப் படமும் ஏமாற்றம் தான்.

சினிமாவை சீரியஸாக எடுத்துக் கொள்பவர்கள், ஆர்ட் ஃபிலிம் அபிமானிகள்.

சமூக சிந்தனைவாதிகள். படத்தில் ஆங்காங்கே சமூக சிந்தனைகளை அள்ளித் தெளித்திருப்பது உண்மை தான். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இது ஒரு பொழுதுபோக்குப் படம், சமூக மாற்றங்களை கொண்டு வருவதற்காக முயன்று எடுக்கப்பட்ட படமல்ல.

மல்லிகா ஷெராவத் ரசிகர்கள். படத்தில் மல்லிகாவக்கு கொஞ்சம் ஸ்கோப் இருப்பது உண்மை தான், ஆனால் ரொம்ப பெரிய ஸ்கோப் எல்லாம் இல்லை.

அதெப்படி மனிதனின் செயல்கள் பூமியை பாதிக்க முடியும்?
சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் மாசடைதல், புவி வெப்பமடைதல் போன்ற விஷயங்களைப் பற்றி பதிவிட்டிருந்தேன். அதற்கு மறுமொழி அளித்த ஒரு நண்பர், “அதெப்படி 3 பில்லியன் வருடங்களாக சுழன்று வரும் பூமியின் வெப்பநிலையை மனிதன் 50 வருடங்களாக புரிந்து வரும் செயல்கள் பாதிக்க முடியும்” என்கிற ரீதியில் கேட்டிுருந்தார். இது நல்ல கேள்வி, பலர் மனதில் இயல்பாக தோன்றக்கூடிய கேள்வி. நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு வாரப்பத்திரிகையில் சுஜாதா அவர்களின் கேள்வி பதில் பகுதியில் புவி வெப்பமடைதல் பற்றிய ஒருவரின் கேள்விக்கு, “மனித செயல்களெல்லாம் பூமியை ஒன்றும் செய்துவிட முடியாது. இதெல்லாம் அதுக்கு கொசு கடிக்கிற மாதிரி, புவி வெப்பமடைதல் அபாயம் எல்லாம் சும்மா கட்டுக்கதை” என்பது போல் பதில் அளித்திருந்தார். உண்மையில் நானும் ஆரம்பத்தில் இது போன்றே சிந்தித்திருக்கிறேன்.

புவி வெப்பமடைதல் எல்லாம் பூமிக்கு கொசு கடிக்கிற மாதிரி கொசுறான விஷயம் என்பது உண்மை தான். ஆனால், கொசு கடித்து நம் ரத்தத்தை உறிஞ்சினால் நாம் அதை அடிக்கிறோமா இல்லையா? கொசு கடிப்பது, கொஞ்சம் ரத்தம் குடிப்பது, நாம் அதை அடிப்பது, இதெல்லாம் கடிபட்ட மனிதனுக்கு பெரிய வாழ்க்கைப் பிரச்சனை இல்லை. ஆனால் கொசுவுக்கு அது நிச்சயம் வாழ்க்கைப் பிரச்சனை. அது போல் பூமியின் வளங்களை தன் சுயநலங்களுக்காக மனிதன் அரக்கத்தனமாக உறிஞ்சி எடுப்பதும், மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதும் பூமித்தாயின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், சும்மா ஜுஜுபி. ஆனால் இதெல்லாம் மனித குலத்தினராகிய நமக்குத்தான் ஆபத்தில் போய் முடியும். மனிதனின் இது போன்ற செயல்களால் விளைந்த ‘புவி வெப்பமடைதல்’ (global warming) இன்று மனித குலத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் பிரச்சனையாக உருவெடுத்து வளர்ந்திருப்பது கசப்பான உண்மை. ஒரேயடியாக சுனாமி போல் ஏதாவது வந்து நம்மை அடித்துக்கொண்டு போனால் கூட பரவாயில்லை. இது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை துன்பப்படுத்தி கொல்லக் கூடிய பிரச்சனை.

புவி வெப்பமடைவது, அதனால் வடதுருவ, தென்துருவ பனிக்கட்டிகள் உருகி வருவது, கடல்மட்டம் உயர்வது, தட்ப வெட்ப நிலை கன்னாபின்னாவென்று மாறிக்கொண்டு வருவது, கண்ட இடங்களில் கண்ட நேரத்தில் கண்டபடி மழை பெய்வது, மழை பெய்ய வேண்டிய இடத்தில் வறட்சி காணப்படுவது… இதெல்லாம் மனிதனின் செயல்களாலேயே விளைபவை என்பது இன்று திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்டு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மைகள். இன்னமும் கூட மனித செயல்களால் தான் புவி வெப்பமடைகிறதா என்று விவாதம் செய்து கொண்டிருந்தால் கடைசி வரை விவாதித்துக் கொண்டேயிருக்க வேண்டியது தான், அப்புறம் ஊர் பற்றி எரிய நீரோ பிடில் வாசித்த கதையாகிவிடும்.

ஆறடி உயரம் உள்ள ஒரு மனிதனை கண்ணுக்கே தெரியாத வைரஸ் கிருமிகள் பாதித்து ஜுரத்தை ஏற்படுத்துவதில்லையா? அது போல் மூன்று பில்லியன் வருடங்களாக சுற்றி வரும் பிரம்மாண்ட பூமியை அற்ப மனித குலம் தன் ஐம்பது வருட அறிவுகெட்ட செயல்களால் பாதித்து அதன் வெப்பத்தை சற்று அதிகப்படுத்துவதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? புவி வெப்பமடைதல் என்பது பூமிக்கு சும்மா ஒரு நாள் ஜுரம் தான். ஆனால் நம் மனித குலத்துக்கு தான் அழிவு காத்திருக்கிறது, அதாவது நாம் உடனே விழித்து பொறுப்புணர்ச்சியுடன் செயல்படத் துவங்காவிட்டால். பூமியை நாம் ஒன்றும் காக்க வேண்டியதில்லை, நாம் இன்றோ இன்னும் பல ஆயிரம் வருடங்கள் கழித்தோ அழிந்த பின்னும் பல கோடி வருடங்களுக்கு பூமி சுழன்று கொண்டு தான் இருக்கும். நம்மைத் தான் இப்போது நாம் காத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? மரங்கள் நடுவது, சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வது, எரிசக்தி, மின்சாரம் இதையெல்லாம் வீணாக்காமல் தேவையான சமயங்களில் மட்டும் பயன்படுத்துவது, இது போன்ற நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை எங்கும் ஏற்படுத்துவது.

(குறிப்பு: முதலில் புவி வெப்பத்தால் ஏற்படும் அபாயங்களை சுஜாதா ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், பின்னர் சில காலம் கழித்து அவரே இந்த உண்மையை ஏற்றுக் கொண்டார்.)

day by day, day by day, வாழ்க்கைப் பயணம் day by day…
முன்னொரு காலத்தில், ரயில், விமானம், செல்போன் எல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் விறகு வெட்டிப் பிழைக்கும் ஒருவர் காட்டின் ஓரமாக வாழ்ந்து வந்தார். அவர் ஏதோ ஒரு முக்கிய வேலையாக காட்டின் மறுபக்கத்தில் இருந்த ஒரு ஊருக்கு உடனே போக வேண்டியிருந்தது. காலையில் காட்டின் வழியாக தன் பயணத்தைத் தொடங்கினார். நாள் முழுவதும் பயணம் செய்த பிறகு சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் காட்டின் மத்தியப்பகுதியை வந்தடைந்தார். காடுகளையெல்லாம் அழித்து கான்கிரீட் மரங்களை மொத்தமாக வளர்க்கும் இந்தக் காலம் போல் இல்லாமல் உயரமான அடர்ந்த பச்சை மரங்களைக் கொண்ட காடாக அது இருந்ததால் மாலை நேரமானதும் இருள் வேகமாக சூழ ஆரம்பித்தது. நம் நண்பரோ தான் செல்ல வேண்டிய இடத்தை அடுத்த நாள் காலையிலேயே சென்றடைய வேண்டும். இரவு முழுவதும் பயணம் செய்து காட்டைக் கடந்தால் தான் அது முடியும். கையில் விளக்கு ஏதும் வேறு எடுத்து வரவில்லை. என்ன செய்வது? அப்போது சிறிது தொலைவில் மரங்களின் மத்தியில் ஒரு குடிசை ஒன்று இருப்பது போல் தெரிந்தது. ஏதாவது உதவி கிடைக்கும் என்று அந்த குடிசையை நோக்கி நடந்தார் நம் நண்பர். அந்தக் குடிசை ஒரு முனிவரின் குடில். குடிலுக்குள் முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் ‘முனிவர்கள் மாய வித்தைகள் பல செய்ய வல்லவர்கள்’ என்று  கேள்விப்பட்டிருந்தது நம் நண்பருக்கு நினைவிற்கு வந்தது. ஒரு விசித்திர யோசனையும் தோன்றியது.  முனிவரிடன் சென்று தனக்கு ஒரு வரம் வேண்டும் என கேட்டுக்கொண்டார் நம் நண்பர். என்ன வரம் வேண்டும் என்று முனிவர் கேட்டவுடன், தான் போகும் பாதையெல்லாம் ஒளிமயமாக்க வேண்டும் என கேட்டார். அதாவது, முனிவர் மாய வித்தைகளை பயன்படுத்தி தெரு விளக்குகள் போல் எதையாவது பாதையெங்கும் உருவாக்கி ஒளிமயமாக்குவார் என எதிர்பார்த்தார் நம் நண்பர். ஆனால் முனிவரோ, ஒரு லாந்தர் விளக்கை அவரிடம் கொடுத்து எடுத்துச் செல்லச் சொன்னார். நம் நண்பருக்கு ஏமாற்றம். ஏதோ, மாய மந்திரம் செய்து தன் பாதையை ஒளிமயமாக்குவார் என்று பார்த்தால் இந்த விளக்கைக் கொடுக்கிறாரே, இது பத்து அடிக்கு தானே வெளிச்சம் கொடுக்கும் என முனிவரிடம் கேட்டே விட்டார். முனிவர், “அப்பனே, நான் மாயம் செய்து உன் பாதையை ஒளிமயமாக்கக முடியும், ஆனால் அதனால் உனக்கு ஒன்றும் பயனில்லை. எப்படியும் உன்னால் அடுத்த பத்து அடியைத்தான் பார்க்க முடியும். இந்த விளக்கைப் பயன்படுத்தி உன் முன் உள்ள பத்து அடிகளைக் கடந்தால் அடுத்த பத்து அடிகளுக்கு உனக்கு வெளிச்சம் கிடைக்கும். அப்படியே நீ காட்டைக் கடந்து நீ செல்ல வேண்டிய இடத்திற்கு நாளை காலை தவறாமல் சென்றடைவாய்” என்றார்.

நம்மில் பலரும் இது போலத்தான். எதிர்காலத்தைப் பற்றியே சிந்தனை. நம் முன் உள்ள நிகழ்காலத்தை விட்டு விட்டு அறியாத எதிர்காலத்திற்கே நம் சிந்தனைகளை செலவு செய்து திட்டமிட்டு வருகிறோம், கடவுளிடமும் சென்று கும்பிட்டு நம் எதிர்காலத்தை ‘insure’ செய்ய முயல்கிறோம். திட்டங்கள் தேவை தான், ஒரு தொலைநோக்குப் பார்வை, வாழ்க்கைக்கென ஒரு லட்சியம் அவசியம் தேவை தான். ஆனால் இன்றைக்கு செய்ய வேண்டிய காரியத்தை சரியாகச் செய்தால் தான் ஒரு நாள் நம் லட்சியத்தை அடைய நமக்கு வாய்ப்புள்ளது. மலையின் உச்சியை அடைய வேண்டுமானால் ஒவ்வொரு படியிலும் கவனத்தைச் செலுத்தி அடி மேல் அடி வைத்து தான் அடைய முடியும். அதை விட்டுவிட்டு பாதி வழியில் சென்றுகொண்டிருக்கும் போது நம் கண் முன் உள்ள படியில் கவனம் செலுத்தாமல் மலை உச்சியை கண்டு கொண்டே அடி எடுத்து வைத்தால் சறுக்கி விழுந்து மலையின் அடிவாரத்தை அடை வேண்டியது தான். பிறகு பயணத்தை மறுபடியும் முதலிலிருந்து தொடங்க வேண்டியது தான்.

நம் கண் முன் உள்ளதை, நம்மால் அறிய முடிவதை மறந்து விட்டு காணாத, அறியாத ஒன்றைப் பற்றி கற்பனை செய்து கனவு கண்டுகொண்டோ, கவலைப்பட்டுக் கொண்டோ இருந்தால் எங்கும் செல்ல முடியாது. இன்று நாம் செய்ய வேண்டியதில் கவனம் செலுத்தி சரியாகச் செய்து ஒவ்வொரு நாளும் இவ்வாறே அன்றன்று செய்ய வேண்டிவற்றை அன்றன்று சிறப்பாகச் செய்து day by day வாழ்க்கைப் பயணத்தை அனுபவித்தால் தான் அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்.

(இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் பரமஹம்ஸ நித்யானந்தரின் சொற்பொழிவைக் கேட்க நேர்ந்தது. அதில் அவர் சொன்ன கருத்துகளின் தூண்டுதலில் எழுதியது இது.)

நடிகர் மாதவன் சுற்றுச்சூழல் போராளியாகிறார்!
சென்னை நரக… sorry, ‘நகர’வாசிகளிடம் மாதவன் கேட்கிறார்,

நீங்க உங்க வீட்டில் சிட்டுக்குருவியை கடைசியா பார்த்து எத்தனை நாளாகிறது, தவளையின் கத்தலை கேட்டு எத்தனை நாளாகிறது?……….. சிட்டுக்குருவியெல்லாம் எங்கே போச்சு? அது தொலைஞ்சு போனதுக்கு காரணம் என்ன? சாப்பிட புழு இல்லாம போனது தானே காரணம்? ஏன் புழு இல்லாம போச்சு?….. நம்ம கார்லஇருந்தும் பைக்லேயிருந்தும் வெளிவரும் நச்சுப்புகை தானே இதுக்கெல்லாம் காரணம்? நாமெல்லாம் பொறுப்பில்லாம பூமியோட வளத்தை சூறையாடியதால கடந்த 50 வருஷத்தில் மட்டும் பூமியோட climate ஒரேயடியா மாறிப்போச்சு! எங்கே பார்த்தாலும் புயல், வெள்ளம், அப்படியில்லேன்னா அதிகமான வெப்பம், பஞ்சம்.

மேலும் சொல்கிறார்…

சென்னையில இப்போவெல்லாம் குளிர்காலம்கிறதே இல்லாம போச்சு (அது எப்போ தான் இருந்திருக்கு   ) கன்னாபின்னான்னு மழை பெயுது, ஆனாலும் தண்ணீர் பஞ்சம்! கோடைக் காலங்களில அதிகப்படியான வெப்பம். இப்படியே போனா எதிர்காலத்தில் ரோட்டிலேயே தோசை, ஆம்லெட் எல்லாம் சுட்டுக்கலாம். ஆனா அதை சாப்பிட நாம இருப்போமாங்கறது தான் பிரச்சனையே!!

இதை படிக்கும்போது இரண்டு வருஷம் முன்னாடி பில் க்ளின்டன் சொன்னது ஞாபகத்துக்கு வருது. சர்வதேச பெருந்தலைகள் கலந்துக்கற சுற்றுச்சூழல் கருத்தரங்கங்களில நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அமெரிக்கா (புஷ்) மதிக்காம இருக்கறத பார்த்து கடுப்படைஞ்ச கிளின்டன், “இதே ரேஞ்சில் போனா அடுத்த கருத்தரங்கம் நடத்தும் போது நிலமெல்லாம் மூழ்கிப்போய், எங்காவது படகுல மேல நின்னு தான் நாமெல்லாம் பேச வேண்டியிருக்கும்” என்று அலுத்துக்கொண்டார்.

மாதவன் மேலும் சொல்றார் கேளுங்க,

உலகத்தில் வாழும் நாம் எல்லோருமே இதுக்கு பொறுப்பெடுத்துக்கலைன்னா மனித இனத்தை யாராலும் காப்பாத்த முடியாது. நம் வாழ்க்கை முறையில் நாம் செய்துகொள்ளும் சின்ன சின்ன மாற்றங்களும் பெரிய அளவில் உதவும். முடிஞ்ச வரைக்கும் ஏசி பயன்படுத்தாதீங்க, மின்சாரத்தை சேமியுங்க, பிளேன்ல போறதுக்கு பதிலா ரயில்ல போங்க, முடிஞ்ச வரைக்கும் (பஸ், ரயில், ஷேர் ஆட்டோ மாதிரியான) பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துங்க.

கடைசியா முத்தாய்ப்பா சொல்றார்…

சுற்றுச்சூழல் ஆர்வம், சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்க நம்மாலான முயற்சி செய்வது, சுற்றுச்சூழல் தூய்மையா இருக்க நம் வாழ்க்கையில் சில மாற்றங்கள் செய்துகொள்வது, இதெல்லாம் சமூக சேவை இல்லை, காலத்தின் தேவை. நம் இனத்தை காப்பாற்றிக்கொள்ள, உங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீங்கள் ஒவ்வொருவருமே சுற்றுச்சூழல் ஆர்வலராவது இப்போது மிகவும் அவசியம்.

இதெல்லாம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மாதவன் சொன்னதாக நேற்றைய ஹிண்டுவில் படித்தது. மேலே சொன்னதெல்லாம் யார் சொல்கிறார், என்ன மேடையில் சொல்லப்பட்டது என்பது முக்கியமில்லை, சொல்லப்படும் விஷயம் தான் கவனிக்க வேண்டியது. நம்முடைய அற்ப ஆசைகளை தீர்த்துக்கொள்ள நுகர்வோர் கலாசாரம் (consumerism) என்ற பெயரில் நம் பூமியின் வளங்களை கடந்த 50 வருடங்களில் சூறையாடி சுற்றுச்சூழலை கெடுத்து அடுத்த தலைமுறையினர் வாழ வழியில்லாம் பண்ணியது உண்மை, புவி வெப்பமடைதல் (global warming), அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் எல்லாம் உண்மை, இதையெல்லாம் யாரும் மறுக்க முடியாது. இதெல்லாம் மாதவன் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை. தினமும் செய்திகளை பார்த்தாலே தெரியும், உலகில் உள்ள எந்த மூலையிலாவது புயல், மழை, வெள்ளம்… ‘இத்தனை மக்கள் வீடுகளை இழந்தார்கள்’ என்பது போன்ற செய்திகள் வாடிக்கையாகிவிட்டது. “நாங்க நினைச்சதை விட ரொம்ப வேகமாவே துருவ பனிக் கட்டிகள் (polar ice caps) உருகி வருகிறது” இது புவி வெப்பமடைதலை ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் வருஷா வருஷம் தவறாமல் சொல்லும் டயலாக். முதலில் புவி வெப்பமடைதலே கட்டுக்கதை என்றார்கள், அப்புறம் இதெல்லாம் உண்மை என்பதை ஒப்புக்கொண்டு 100 வருஷத்துக்குள் பனியெல்லாம் உருகி கடலோரப் பகுதிகள் மூழ்கும் என்றார்கள், இப்போ ‘நாங்க நினைச்சதை விட வேகமாவே உருகிட்டு வருது’ என்கிறார்கள். 2013இல் உலகம் அழியும் என்பது சில மதங்களின் நம்பிக்கை. இவர்களின் நம்பிக்கையை விட விஞ்ஞானிகளின் கணக்கு ஒன்றும் துல்லியமானது இல்லை போலிருக்கிறது.

புவி வெப்பமடைதலும் அபாயங்களும் எந்த அளவுக்கு உண்மையோ, அதே போல் நாம் எல்லோரும் ஒருசேர பொறுப்பை ஏற்றுக்கொண்டு நம்மாலானதை செய்தால் மனித இனத்தை அழிவிலிருந்து காக்க வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. சென்னையில் குளிர்காலம் இல்லையென்று மாதவன் சொன்னாலும், இந்த நவம்பர் மாதம் சென்னையில் நல்ல மிதமான தட்ப வெப்பம் தான் நிகழ்கிறது. அப்போதும் கூட பல வீடுகளில் இருபத்துநான்கு மணிநேரமும் ஏசி ஓடுகிறது…. இதை என்னவென்று சொல்வது? பல ஊர்களில் தெரு விளக்குகள் கிடையாது என மக்கள் குறைபட்டுக்கொள்வது தெரிந்தது தான், ஆனால் எங்கள் ஊரில் பகலில் கூட தெருவிளக்கு எரியும் தெரியுமில்ல? அரசாங்கத்துக்கும் மின்வாரியத்துக்கும் எங்கள் மேல் அவ்வளவு அக்கறை! அதே போல் எனக்குத் தெரிந்த ஒருவருடைய தொழில் கொஞ்சம் சரியாகப் போகவில்லை, தொழில் முறையை கொஞ்சம் ஆராய்ந்து தேவையான மாற்றங்களை செய்துகொள்ள வேண்டியது தானே? அதைச் செய்யாமால் நேராகப் போய் வாஸ்து expertஐ பார்த்திருக்கிறார். அவர் வீட்டின் முன் இருந்த தென்னை மரம் தான் அவருடை தொழில் வீழ்ச்சிக்கு காரணம் என்று ‘எக்ஸ்பர்ட்’ சொல்ல, அடுத்த நாளே அந்த மரம் சாய்க்கப்பட்டது, நன்றாக காய்த்துக்கொண்டிருந்த மரம் அது, அது வளர்வதற்கு எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும், எத்தனை உயிர் சக்தி அதை வளர்த்திருக்கும். அதையா இப்படி ஒரே நாளில் சாய்ப்பது? இது போன்ற முட்டாள்தனமான காரியங்கள் செய்யாமல் கொஞ்சம் புத்திசாலித்தனமாக செயல்பட்டாலே நாம் பெரிய புண்ணியம் செய்தவர்களாகிறோம்.

நம் வாழ்க்கை முறைகளில் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து கொண்டாலே நல்ல துவக்கம்.  முடிந்த வரை நம் கார் பைக்குகளில் செல்லாமல் பஸ், ரயில், ஷேர் ஆட்டோ பயன்படுத்தலாம். முடிந்தால் சைக்கிளிலேயே செல்லலாம், உடம்புக்கும் நல்லது. பெங்களூரில் சில மென்பொருளாளர்கள் சைக்கிளிலேயே அலுவலுக்கு செல்கிறார்கள். மின்சாரத்தை அதிகமாக குடிக்கும் குண்டு பல்புக்கு ஒரு டாட்டா காட்டிவிட்டு CFL விளக்குகளை பயன்படுத்தலாம். CFL விளக்குகள் மின்சாரத்தை சேமிக்கும், பில் கட்டணமும் குறையும், சுற்றுச்சூழலுக்கும் ஓரளவு நல்லது. வீட்டுக்கு ஒரு மரமாவது வைத்து வளர்க்கலாம். இப்போதெல்லாம் சந்த பொந்துகளில் இருக்கும் சிறிய மரம் செடிகொடிகளைக் கூட வெட்டிப்போட்டு விட்டு, அதற்கு பதிலாக அங்கே கான்கிரீட் வளர்த்து, அதை இரண்டு, நான்கு, எட்டு போர்ஷன்களாக பிரித்து ‘அப்பார்ட்மென்ட்’ ஆக்கி விடுகிறார்கள், சட்டத்துக்கு புறம்பாக வரைமுறையில்லாமல் ஏரிப்படுகளிலெல்லாம் போய் வீடு கட்டிவிட்டு, பிறகு மழை பெய்யும் போது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதாக டிவி செய்திகளில் தோன்றி குறை சொல்கிறார்கள்! புத்திசாலித்தனமாக சிந்தித்து, வழிமுறைகள் வகுத்து, சட்டதிட்டங்களை சரியாக பின்பற்றினால் தானே நமக்கும் நல்லது, மரங்களும் செழித்து வளரும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது, மனித குலத்துக்கே நல்லது.

மாதவன் சொல்வது போல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் செயல்படுவது ஒன்றும் சமூக சேவை இல்லை, அது பொது நலம் இல்லை, நம்மை நாமே காத்துக்கொள்ள நாம் எடுக்கும் சுயநல நடவடிக்கை தான். இப்போது நம்மில் பலர், “என்னுடைய ஒரு கால் முறிஞ்சா கூட பரவாயில்ல, பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு கால் முறியனும்” என்பது போன்ற மனநிலையில் வாழ்வது முட்டாள்தனமான சுயநலம். “முதல்ல அவனை நிறுத்தச் சொல்லு… அப்புறம் நான் நிறுத்தறேன்” என்பது போன்ற மனப்போக்கு இனிமேல் உதவாது! ‘அனைவரின் நன்மையே தனக்கும் நன்மை’, ‘இயற்கையுடன் இசைந்து வாழும் வாழ்க்கையே நிறைவான வாழக்கை’ என்பது போன்ற உண்மைகளை உணர்ந்து அனைவருக்கும் நன்மை பயக்கும் செயல்களை செய்தலே புத்திசாலித்தனமான சுயநலம். அப்படிப்பட்ட புத்திசாலித்தனமான சுயநலம் தான் இன்றைய அவசரத் தேவை.

புத்தம் புது பூமி வேண்டும்…
“திருடா திருடா” திரைப்படத்தில் எனக்குப் மிகவும் பிடித்த பாடல் ஒன்றின் வரிகள்…

புத்தம் புது பூமி வேண்டும்

நித்தம் ஒரு வானம் வேண்டும்

தங்க மழை பெய்ய வேண்டும்

தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்

ஜோடி நிலவொன்று வேண்டும்

நெற்றி வேர்க்கின்ற போது

அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்

மலர்கள் வாய் பேச வேண்டும்

வண்டு உட்காரும் பூ மேலே

நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு

உன் அருகிலே ஓர் இடம் கொடு

புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு

பூமியில் சில மாறுதல் தனை வர விடு

யுத்தம் இல்லாத பூமி

ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்

மரணம் காணாத மனித இனம்

இந்த மண்ணில் நிலைக் கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்

பாலைவனம் பூக்க வேண்டும்

சாந்தி சாந்தி என்ற சங்கீதம்

சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்

வந்தவை இனி வாழட்டும்

தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்

தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

பாடல் முழதுமே எனக்குப் பிடித்தது தான், அதிலும் எனக்கு மிகவும் பிடித்த வரிகளை bold செய்திருக்கிறேன். “புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு”, மற்றும் அந்த கடைசி இரண்டு வரிகள், இதிலெல்லாம் வெளிப்படும் கருத்துகள் எத்தனை ஆழம்! எத்தனை அழகு!

இந்த திரைப்படம் வந்த போது நான் சின்னப் பையன். ரஹ்மானின் இசைக்காக இந்தப் பாடலை அடிக்கடி கேட்டு ரசித்திருந்தாலும் பாடல் வரிகளைப் புரிந்து கொண்டு பாராட்டும் அளவுக்கு அறிவு கிடையாது. இடைப்பட்ட காலத்திலும் போகிற போக்கில் அப்பப்போது இப்பாடலை கேட்டிருக்கிறேன்… புரிந்தாலும் பெரிதாக ஒன்றும் விளங்கியதில்லை. இப்போதும் கூட கவிதைகளையெல்லாம் ரசிக்கத் தெரிவதில்லை எனக்கு. ஆனால் நேற்றிரவு பழைய பாடல்களையெல்லாம் தேடிப்பிடித்து கேட்டுக் கொண்டிருந்தபோது இந்தப் பாட்டை மீண்டும் ஒருமுறை கேட்டேன், எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  ஒரு அழகான பிரார்த்தனை, இன்றைய காலத்தில் மிகவும் தேவையானதொரு affirmation போலல்லவா இருக்கிறது. வைரமுத்துவுக்கு ஒரு சபாஷ்!

இதோ அந்தப் பாடல், நீங்கள் கேட்டு(ம் பார்த்தும்) ரசிப்பதற்கு…

இதே படத்தில் வரும்  “ராசாத்தி…” பாடலும் எனக்குப் மிகவும் பிடித்த ஒன்று. வைரமுத்துவின் வரிகளுக்காக என்பதை விட ஷாகுல் ஹமீதின் குரலுக்காக (“என் உயிரு என்னுதில்லை” என்று பாடிய அவரது உயிர் இளமையிலேயே பிரிந்தது ஒரு பெரிய இழப்பு). ரஹ்மானின் இசையில் அந்தப் பாடலுக்கு இன்னொரு தனிச்சிறப்பும் உண்டு, என்ன அது? பெரிய சிதம்பர ரகசியமெல்லாம் இல்லை, நிறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்…. தெரியாதவங்க கீழே இருக்கும் வீடியோவை பார்த்து (கேட்டு) கண்டுபிடிச்சு மறுமொழியா சொல்லுங்க. அப்படியும் கண்டுபிடிக்க முடியாதவங்களுக்கு நான் அப்புறமா சொல்றேன்.