பதிவுகளின் குறிச்சொல்கள் ‘கியூபா’

அக்டோபர் 3, 2007

கியூபாவின் மனிதாபிமானம்

சே குவாரா பற்றி தெரிந்திராதவர்கள் இருக்க முடியாது, அர்ஜென்டினாவில் பிறந்திருந்தாலும் கியூப நாட்டு புரட்சியில் ஈடுபட்டு அந்நாட்டில் சோசியலிச ஆட்சி அமைய காரணமானவர்களில் முக்கியமானவர். காங்கோ, பொலிவியா போன்ற நாடுகளிலும் சோசியலிச ஆட்சி அமைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அந்நாடுகளுக்குச் சென்று போராடியவர். அப்படி பொலிவியாவில் 1967ஆம் வருடம் போராடிக் கொண்டிருந்த சே குவாராவை பொலிவிய ராணுவம் அமெரிக்க உளவு நிறுவனத்தின் உதவியுடன் சுட்டுக்கொன்றது. ‘சே’வை தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பொலிவிய ராணுவ வீரரான [...]