முன்னொரு காலத்தில், ரயில், விமானம், செல்போன் எல்லாம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் விறகு வெட்டிப் பிழைக்கும் ஒருவர் காட்டின் ஓரமாக வாழ்ந்து வந்தார். அவர் ஏதோ ஒரு முக்கிய வேலையாக காட்டின் மறுபக்கத்தில் இருந்த ஒரு ஊருக்கு உடனே போக வேண்டியிருந்தது. காலையில் காட்டின் வழியாக தன் பயணத்தைத் தொடங்கினார். நாள் முழுவதும் பயணம் செய்த பிறகு சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் காட்டின் மத்தியப்பகுதியை வந்தடைந்தார். காடுகளையெல்லாம் அழித்து கான்கிரீட் மரங்களை மொத்தமாக வளர்க்கும் இந்தக் காலம் போல் [...]
பதிவுகளின் குறிச்சொல்கள் ‘குட்டிக்கதை’
நவம்பர் 8, 2007
தீபாவளி வாழ்த்துக்கள்!
முதலில் தென்கச்சி சுவாமிநாதனின் கதை ஒன்று…
இருட்டும் நேரம். ஒருவன் ஓடிப்போய் ஒரு விளக்கை ஏற்றிக்கொண்டு வந்தான்.
“என்ன செய்கிறாய்?” — அவர்
“இருட்டை விரட்டிக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன். இவர் சிரித்தார்.
“ஏன் சிரிக்கிறீர்கள்?”
“இல்லாத ஒன்றை எப்படி விரட்ட முடியும்?”
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை, “என்ன சொல்கிறீர்கள்? இருட்டு என்பது இல்லாத ஒன்றா…?”
“ஆமாம். இருட்டு என்று தனியாக ஒன்றுமில்லை, வெளிச்சம் இல்லாத நிலை தான் அது!
“ஓர் இடத்தில் வெளிச்சம் இருந்தால் வெளிச்சமாக உள்ளது என்கிறோம். அந்த இடத்தில் வெளிச்சம் இல்லை என்றால் இருட்டு [...]
அக்டோபர் 5, 2007
நான் உன்னை மன்னிக்க முடியாது!
கௌதம புத்தர் ஞானம் அடைந்த பிறகு ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு உபதேசித்தார். புத்தரின் போதனையால் பலனடைந்த பலர் அவருடைய சங்கத்தில் சேர்ந்து சிஷ்யர்கள் ஆயினர், புத்தர் எங்கு சென்றாலும் பெரும் கூட்டம் கூடியது. அவ்வாறு அவர் ஒரு ஊருக்குச் சென்று அங்குள்ள ஓர் மண்டபத்தில் பெருங்கூட்டத்தினிடையே போதித்துக் கொண்டிருந்தார். அவ்வூரில் இருந்த மனிதன் ஒருவனுக்கு புத்தரைச் சுற்றி பெரும் கூட்டம் கூடி அவர் புகழ் பாடுவது பிடிக்கவில்லை. புத்தர் ஒரு போலிச் சாமியார் என நம்பினான். [...]