பதிவுகளின் குறிச்சொல்கள் ‘புத்தர்’

அக்டோபர் 5, 2007

நான் உன்னை மன்னிக்க முடியாது!

கௌதம புத்தர் ஞானம் அடைந்த பிறகு ஊர் ஊராகச் சென்று மக்களுக்கு உபதேசித்தார். புத்தரின் போதனையால் பலனடைந்த பலர் அவருடைய சங்கத்தில் சேர்ந்து சிஷ்யர்கள் ஆயினர், புத்தர் எங்கு சென்றாலும் பெரும் கூட்டம் கூடியது. அவ்வாறு அவர் ஒரு ஊருக்குச் சென்று அங்குள்ள ஓர் மண்டபத்தில் பெருங்கூட்டத்தினிடையே போதித்துக் கொண்டிருந்தார். அவ்வூரில் இருந்த மனிதன் ஒருவனுக்கு புத்தரைச் சுற்றி பெரும் கூட்டம் கூடி அவர் புகழ் பாடுவது பிடிக்கவில்லை. புத்தர் ஒரு போலிச் சாமியார் என நம்பினான். [...]