பதிவுகளின் குறிச்சொல்கள் ‘விவேகானந்தர்’

செப்டம்பர் 20, 2007

நாத்திக மன்னருக்கு விவேகானந்தரின் பதிலடி!

தன்னுடைய சொற்பொழிவுகளாலும் கருத்தக்களாலும் உலகெங்கும் புகழ் பெறும் முன் சுவாமி விவேகானந்தர் ஒரு திருவோடு ஏந்திய துறவியாக இந்தியா முழுவதும் சுற்றினார். இன்றைய ராஜஸ்தான் பகுதியில் அவர் சுற்றிக்கொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம்.

ஆல்வார் நாட்டு திவானான மேஜர் ராம்சந்திரர் சுவாமிஜியைப் பற்றி கேள்விப்பட்டு, தமது வீட்டிற்கு அழைத்தார். அந்நாட்டு மன்னரான மங்கள் சிங் ஆங்கில மோகம் கொண்டவராக இருந்தார். சிந்தனை, செயல் அனைத்திலும் ஆங்கிலேய பாணியைப் பின்பற்றுவதில் நாட்டம் கொண்டிருந்தார். திவானுக்கு அது பிடிக்கவில்லை. மன்னர் [...]